
எஸ். டி. பி. ஐ. கட்சியின் மதுரை வடக்கு தொகுதி கூட்டம் தொகுதி தலைவர் பாஷா தலைமையில் நடைபெற்றது.
மாநில செயலாளர் நஜ்மா பேகம், மாவட்ட தலைவர் பிலால்தீன் அமைப்பு பொது செயலாளர் பக்ருதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பு நிர்வாக கட்டமைப்பு , வடக்கு தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் மக்கள் அடிப்படை பிரச்சினை சம்பந்தமாகவும் விவாதிக்கப்பட்டது

இதே போன்று கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் ஒன்றிய தலைவர் கரீம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பிலால் தீன் செயற்குழு உறுப்பினர் சீனி சிக்கந்தர் ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக பங்கேற்றனர் கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை, முன்னெடுப்பு நிர்வாக கட்டமைப்பு , சக்கிமங்கலம், ஆண்டார் கொட்டாரம், இளமனூர் ஊராட்சியில் மக்கள் அடிப்படை பிரச்சினை சம்பந்தமாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. செயலாளர் செல்வக்கனி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

