
மதுரை கூடல்நகர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் போதை எதிரப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் பள்ளியின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகளும், மற்ற வகுப்பு மாணவிகளும் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்வினை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் நீதிமணி, உதவி திட்ட அலுவலர் லூர்து மேரி அவர்களும் ஒருங்கிணைத்தார்கள். இந்த நிகழ்வில் செல்லூர் மற்றும் கூடல்புதூர் சரக காவல் நிலைய அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். மேலும் நல்லோர் குழு சார்பில் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு இந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு உறுதுணையாக இருந்து வழி நடத்தினார்கள்.

