• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ சைதன்யா மாணவர்களின் பிரமாண்ட சாதனை பல்லாவரத்தில் பாராட்டு விழா..,

ByPrabhu Sekar

Jul 19, 2026

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் ரேடியல் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளியில், NEET-UG 2026 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது.

நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்திய NEET-UG 2026 தேர்வில், ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவன மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற்று மீண்டும் ஒரு முறை தங்களது கல்வித் திறமையை நிரூபித்துள்ளனர்.

இந்தத் தேர்வில், அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் இரண்டு மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், முதல் 100 இடங்களில் 17 மாணவர்களும், முதல் 1000 இடங்களில் 85 மாணவர்களும் இடம்பிடித்து குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீ சைதன்யா மாணவர்கள், அகில இந்திய பொது பிரிவில் 287, 291, 393, 521, 754 மற்றும் 823 ஆகிய தரவரிசைகளைப் பெற்று கல்வித் துறையில் பெருமை சேர்த்துள்ளனர். இதன் மூலம், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான சிறந்த பயிற்சி வழங்கும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஸ்ரீ சைதன்யா மீண்டும் தனது தரத்தை நிரூபித்துள்ளது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும், இந்த ஆண்டு மொத்தமாக 250-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை மாணவர்கள் பெறுவார்கள் என்ற நம்பிக்கையும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விழாவில், ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் சுஷ்மா பொப்பனா, பள்ளி இயக்குநர் டி. நாகேந்திரா, தமிழ்நாடு நிர்வாக செயல்பாட்டு தலைவர் ஜே. ஹரிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மருத்துவக் கனவை நனவாக்கும் மாணவர்களின் இந்த வெற்றி, கல்வித் துறையில் மேலும் பல சாதனைகளுக்கு வழிகாட்டும் என நிகழ்ச்சியில் பேசப்பட்டது.