

மணிப்பூரில் கொடுர செயல் நிர்வாணமாக அணிவகுக்கப்பட்டு கும்பல் பலாத்காரம் செய்யப்பட்ட குக்கி பழங்குடியின பெண்கள் இருவர் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் வெள்ளிக்கிழமை தொழுகை நிறைவேற்றியபின் கண்டன முழக்க போராட்டம் கோரிப்பாளையம் பள்ளிவாசல் பகுதியில் நடைபெற்றன. மாவட்ட தலைவர் பிலால் தீன் துணை தலைவர் ஜாபர் சுல்தான், அமைப்பு பொதுசெயலாளர் பகுர்தீன், 28வார்டு நிர்வாகிகள் செயல்வீரர்கள் இஸ்லாமியர்கள்
ஜமா அத்தார்கள் பொதுமக்கள் பங்கேற்று கலவரத்தை தடுக்க தவறிய ஒன்றிய மாநில அரசுகளை வன்மையாக கண்டிக்கின்றோம். வெறி பிடித்த மிருகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிடு மணிப்பூர் மக்களை காத்திடு மக்கள் ஒற்றுமை வெல்லட்டும் மனிதநேயம் மலரட்டும் என கண்டன முழக்கமிட்டனர்.
இதே போன்று அன்னை சத்யா நகர் புதூர் சங்கர் நகர் தாசில்தார் நகர் செல்லூர் புதுபள்ளிவாசல் மேலூர் பெரிய பள்ளிவாசல் கரிசல்பட்டி அலங்காநல்லூர் உத்தங்குடி 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன முழக்கங்கள் நடைபெற்றன.

