தமிழ்நாடு முழுவதும் பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டுள்ள நிலுவையில் உள்ள காவல்துறை வழக்குகளை ரத்து செய்து ஆணை வெளியிட வேண்டும், தணிக்கை தடையை நீக்க கோரிக்கை உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு எனும் டிக்டோ ஜாக் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார கல்வி அலுவலர், அலுவலகம் முன்பு டிக்டோ ஜாக் சார்பில் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,
இந்த ஆர்ப்பாட்டத்தில் உசிலம்பட்டி வட்டார அளவிலான 100 க்கும் அதிகமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை கலைந்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும், தமிழகம் முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.,





