• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ரோட்டரி மாவட்டம் 3000தின் தங்கமே தங்கம்!!

ByS. SRIDHAR

Aug 20, 2026

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ரோட்டரி மாவட்டம் 3000தின் கனவு திட்டமான தங்கமே தங்கம் என்ற தலைப்பில் அறிவு சார் குறைபாடுடைய சிறப்பு குழந்தைகளுக்கான பிசியோதெரபி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் S.அப்துல் ரஹ்மான் தலைமையில் பெரியார் நகரில் உள்ள ராதாகிருஷ்ணன் அன்பாலயா சிறப்பு பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்டம் 3000தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் S.கதிரேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பிசியோதெரபி டேபிள், மற்றும் உபகரணங்கள் மற்றும் மதிய உணவு வழங்கி தந்தார் நிகழ்ச்சியில் சிறப்பு குழந்தைகளின் திருக்குறள் ஒப்பித்தல், ஓவியம் வரைதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது முன்னதாக வருகை தந்த அனைவரையும் பொருளாளர் கண.மோகன்ராஜா வரவேற்றார்.

நிகழ்ச்சியில் A.ராதா நிர்வாக இயக்குனர் ராதா கிருஷ்ணா அன்பாலயா சிறப்பு பள்ளி, புதுகை வெற்றி ரோட்டரி சங்கத் தலைவர் A.சோமசுந்தரம், R.சங்கர், KC.மணிமாறன், VRM.தங்கராஜ், T.தயாளன், R.பாலமுருகன், J.ஜான் கென்னடி G.வெற்றிக் கொடி, A.சண்முகம், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிறைவாக செயலாளர் K.மணிகண்டன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது.