• Sat. Apr 20th, 2024

மாற்றுத்திறனாளியிடம் காவலர் எனக்கூறி வழிப்பறியில் செய்த இருவர் கைது…

ஊதுபத்தி வியாபாரம் செய்துவரும் மாற்றுத்திறனாளியிடம் குற்றப்பிரிவு காவலர் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை பிடித்து டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரகின்றனர்.

சேலம் அம்மாபேட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான சுரேஷ். இவர் கடந்த 5 ஆண்டுகளாக மூன்று சக்கர சைக்கிள் மூலம் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை அருகே ஊதுபத்தி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது, இருவர் குற்றப் பிரிவு காவலர் எனக்கு 100 ரூபாய் கொடுக்க வேண்டுமென சுரேஷை வற்புறுத்தியுள்ளனர்.

இவர்களை பின் தொடர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ், கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தன்னிடம் வழிப்பறி செய்ததாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்தஇருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் மாற்றுத்திறனாளி இடம் வழிப்பறி செய்தது தெரியவந்தது. டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மாற்றுத்திறனாளி இடம் வழிப்பறி செய்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் குற்றப்பிரிவு போலீசார் எனக்கூறி மாற்றுத்திறனாளி இடம் வழிப்பறி செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *