• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை வசமாக சிக்கிய சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர்…

கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு பல்வேறு லட்ச ரூபாயை கைப்பற்றி உள்ளனர்.

அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் கடந்த 18ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத இரண்டு லட்சத்து 2 ஆயிரம் பணம் பறிமுதல்.

இதனை தொடர்ந்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் வங்கி லாக்கரில் 160 சவரன் நகை மற்றும் 29 லட்சம் ரொக்கம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.