அதிமுக என்கின்ற ஒரு ஆலமரம் இன்று வேர்களும் இல்லாமல் கிளைகளும் இல்லாமல் நடுவில் ஆடிக்கொண்டு உள்ளது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட அதிமுக பிறகு செல்வி ஜெயலலிதா அவர்கள் கட்டிக் காப்பாற்றிய அதிமுக இன்று நீயா நானா என்கிற போட்டி நிலவி வருகிறது.


தமிழகத்தில் தற்போது அதிமுகவை பொறுத்த வரை பேஸ்புக் யுத்தம் நடந்துவருகிறது. அதிகமுகவில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. அவர் அவர் பங்குக்கு ஆதரவாளர்களை சேர்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில், மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் நம்பிக்கையை தோழியான சசிகலா அவர்கள் கட்சியை கைப்பற்ற வேண்டும் என நினைத்துக் கொண்டு உள்ளார். சசிகலாவை பொறுத்தவரை எதிரியை கூட மன்னித்து விடுவார். ஆனால் துரோகியை ஒருநாளும் மன்னிக்கமாட்டார். பழிவாங்கியே தீருவார். அவர்கள் அவருடைய குணம் அப்படி.

ஆனால் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அணியாகவும் தற்போது உருவாகி கொண்டுள்ளனர். இவர்களது சண்டை பிளக்ஸ் பேனர், போஸ்டரைத் தொடர்ந்து தற்போது பேஸ்புக்லும் தொடங்கியுள்ளது.
இரண்டு பேரும் நான் தான் பொதுச்செயலாளர் என போட்டபோட்டி நடத்திக் கொண்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த இரண்டு நாட்கள் முன்பு தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் வந்து விடிய விடிய தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தன்னை காப்பாற்றிக்கொள்ள அதற்கும் தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இறுதியில் யார் வெல்வார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். தொண்டர்களின் மனநிலை என்ன விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.