பிக் பாஸ் சீசன் 5க்கு பிறகு தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி துவங்கிய இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் துவங்கியது.
போட்டியாளர்கள் அனைவரும் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்ற காரணத்தால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகள் அவர்கள் மிகவும் கவனமாக விளையாடி வருகின்றனர். கடந்த வார எலிமினேஷனில் சுரேஷ் சக்ரவர்த்தி வீட்டிலிருந்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து வனிதா விஜயகுமார், நிரூப், ஜூலி, அபிராமி, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, அபினய், தாமரைச்செல்வி, அனிதா சம்பத், ஷாரிக், சுஜா வருணி, சினேகன் மற்றும் ஸ்ருதி பெரியசாமி ஆகியோர் தற்போது வீட்டில் உள்ளனர்.
இவர்களில் நேற்று சுஜாவாருணி எலிமினேட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அபினய் புதிய தலைவராக பொறுப்பேற்றார். இன்று அடுத்த போட்டியாளர் வெளியேறுவாரோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த வாரம் போட்டியை சுவாரஸ்யமாக்க இரண்டு பேர் எலிமினேஷன் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன!