• Thu. Jun 8th, 2023

ஆரி அர்ஜுனன் நடிப்பில் TN43.?!

பிக் பாஸ் சீசன் நான்கில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற நடிகர் ஆரி அர்ஜுனன் தனது பிறந்த நாளை முன்னிட்டு அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார்.

தமிழில் ‘நெடுஞ்சாலை’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஆரி அர்ஜுனன். த்ரில்லர் படமான நெடுஞ்சாலை படம் அவருக்கு பிரபல தன்மையை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின், விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 4 ஆரி போட்டியாளராக கலந்து கொண்டார். மிகவும் மென்மையான கதாபாத்திரமாக ஆரி பிக்பாஸ் வீட்டில் திகழ்ந்தார். எனவே ஆரியின் குணம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பிக்பாஸ் மூலம் ஆரிக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். இந்த ரசிகர்கள் அவரை வெற்றி பெறவும் வைத்தனர்.

இந்நிலையில், தனது பிறந்தநாளில் புது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆரி! TN43 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை அஞ்சு குரியன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியது. மணிவர்மன் இயக்க எஸ்ஏஎஸ் ப்ரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *