பாஜக தலைவரான ஹெச்.ராஜா சர்ச்சைகளின் நாயகன் எனலாம். எங்கே போனாலும் எங்கே மைக்கை நீட்டினாலும் அவருடைய பேச்சு இணையத்தில் டிரெண்ட் அடிக்கும்.
அதாவது நெகட்டிவ் பப்ளிசிட்டி. அவரை திட்டுவதற்காகவே நெட்டிசன்கள் வீடியோவை பிரபலமாக்குவார்கள். அதேபோல மீம் மெட்டீரியல் அரசியல்வாதியும் அவர் தான். இதெல்லாம் ஜாலியாக எடுத்துக்கொண்டு போகலாமா என்று கேட்டால் இல்லை தான். இந்து மதத்தை உயர்த்திப் பேசும் அவர் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தினரை மிகவும் இழிவாக சித்தரிப்பார்.
மேலும் சிறுபான்மையினர்களை ஆதரிக்கக் கூடிய அமைப்புகள், கட்சிகள் என அனைவரையும் விட்டுவைக்காமல் வசைபாடுவார். இன்னும் சொல்லப்போனால் இந்து மதத்தை எதிர்த்தோ பாஜகவை எதிர்த்தோ கேள்வியை முன்வைத்தால் ஊடகவியலாளர்களைக் கூட மிகவும் கொச்சையான வார்த்தைகளால் திட்டுவார். இவர் தன்னுடைய பேட்டியில் எப்போதும் கிறிஸ்தவ மதத்தையும் மத போதகர்களையும் டார்கெட் செய்வார். அண்மையில் கூட கிறிஸ்தவ பள்ளிகள் மதம் மாற்றும் கேந்திரங்களாக மாறிவிட்டன என்றார்.
அது மட்டுமில்லாமல் மத போதகர்கள் உடுத்தும் ஆடையையும் விட்டுவைக்காமல் இழிவாகப் பேசினார். அவரின் பேச்சுக்கு கடிவாளம் போட வேண்டும் என்பதால் நீலகிரி மாவட்ட சிறுபான்மை நலக்குழு சார்பில் ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், “ஹெச்.ராஜா சமீப காலமாக கிறிஸ்தவர்களை அவதூறாக பேசி வருகிறார். குறிப்பாக, பாதிரியார்கள் அணியும் ஆடைகளை பற்றி மிகவும் அவதூறாக பேசியுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தான் சாமர்த்தியமாக பேசுவதாக நினைத்து அவர் சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்லிவிட்டு அப்படி நான் சொல்லவில்லை, இப்படி எல்லாம் சொல்றாங்கனு நான் உங்க கிட்ட சொல்றேன் உடனே நான் தான் இப்டிலாம் சொல்றேன்னு சொல்லுவாங்க என்று தனது கருத்தில் ஒரு நிலைப்பாடு இல்லாத மனிதர் ஹெச்.ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.