• Wed. Dec 11th, 2024

திருப்பதியில் தரிசனம் செய்த த்ரிஷா!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. இதையொட்டி சினிமா பிரபலங்களான ராதிகா சரத்குமார், குஷ்பூ சுந்தர் உள்பட பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில், விஐபி தரிசனத்தில் நடிகை திரிஷா இன்று சாமி தரிசனம் செய்தார்.

நடிகை திரிஷா, தற்போது ‘பொன்னியின் செல்வன் 2’ பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில், முதல்பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் ‘சதுரங்க வேட்டை 2’, ‘ராம்’ உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ள திரிஷா, சோனி லைவ் ஓடிடி தளம் தயாரிக்கும், ‘பிருந்தா’ வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.