7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், எனும் வித்தியாசமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் செல்வராகவன். இதில், ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 ஆகிய படங்களுக்கு காத்திருக்கின்றனர்.. இதில் ஆயிரத்தில் ஒருவன் 2024-ஆம் ஆண்டு தொடங்கும் அதில் தனுஷ் நடிப்பார் என செல்வராகவன் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் செல்வராகவன் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது, ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த செல்வராகவன் என்கிட்டே இருக்கு..தனுஷ் மற்றும் கார்த்தி வரவேண்டும்.. இரண்டு பேர் கிட்டயும் கதையை சொல்லிவிட்டேன்.. நடக்கும் போது அதுவாகவே நடக்கும்” என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எப்போது தான் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 வரும் என ஏக்கத்துடன் காத்துள்ளனர்.
மேலும் இயக்குனர் செல்வராகவன் தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதை தவிர்த்து இவரது நடிப்பில் சாணி காயிதம் வரும் மே 6-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது