த்ரிஷா கிருஷ்ணன்! தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா! தனது திரைப்பயணத்தை தொடங்கும் முன்பாக சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது திரைப்பயணத்தில், மைல்கற்களாக அமைந்த படங்கள் குறித்த ஓர் பார்வை!
மௌனம் பேசியதே!
2002ம் ஆண்டு, சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் “மௌனம் பேசியதே”! இத்திரைப்படத்தில், த்ரிஷா! சந்தியா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்! காதலை வெளிப்படுத்துவதில், பட இறுதியில், திருப்புமுனையாக அமைந்திருக்கும் காட்சியிலும் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது! இந்த படத்திற்காக தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார்.
லேசா லேசா!
2003ம் ஆண்டு, சாம், த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் லேசா! லேசா! முக்கோண காதல் கதையான இந்த படத்தில் த்ரிஷா பாலமணி என்ற மெல்லிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு ஐ.டி.எஃப்.ஏ.வின் சிறந்த புதுமுக நடிகைக்கான விருது கிடைத்தது!
அபியும் நானும்!
2008ம் ஆண்டு, பிரகாஷ் ராஜ், த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம்! தந்தை மகள் பாசத்தை மிக அழகாக காட்சிப்படுத்திய இந்த திரைப்படத்தில், அபி ரகுராம் கதாபாத்திரத்தில் அன்பான மகளாக நடித்த த்ரிஷாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது! இந்த படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது மற்றும் சிறந்த தமிழ் நடிகைக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்! மேலும் விருப்பமான நடிகைக்கான விஜய் விருது வழங்கப்பட்டது!
விண்ணைத்தாண்டி வருவாயா!
2010ம் ஆண்டு, சிம்பு. த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா! தந்தையின் பாசம் மற்றும் காதல்! இரண்டுக்கும் இடையே போராடும் ஒரு சாதாரண பெண்ணாக “ஜெசி” கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார் த்ரிஷா! இது இவருக்கு கம்பேக் கொடுத்த படம் என்றே சொல்லலாம்!
96!
2018ம் ஆண்டு, விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96! ஜானு! இப்படத்தில் ஜானுவாக நடித்திருந்த த்ரிஷாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது! பள்ளிப்பருவ காதல் ஆழத்தினை மிக அழகாக சொன்ன திரைப்படம் 96! இந்த படத்தின் த்ரிஷாவின் உடை ட்ரெண்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது!
தனது திரைப்பயணத்தில், தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் த்ரிஷாவிற்கு அரசியல் டுடே சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்!