• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

வெப் சீரிஸில் த்ரிஷா…

Byமதி

Oct 17, 2021

த்ரிஷா தற்போது ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’ மற்றும் ‘ராங்கி’ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தெலுங்கில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா.

த்ரிஷா தற்போது ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’ மற்றும் ‘ராங்கி’ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதை தொடர்ந்து, புதிதாக நடிப்பதற்கு கதைகள் கேட்டு வந்தார் த்ரிஷா. இதில் வெப் சீரிஸ் ஒன்றின் கதை த்ரிஷாவுக்கு ரொம்ப பிடித்துவிடவே, அதற்கு ஓக்கே சொல்லியுள்ளார். தற்போது அதன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

‘பிருந்தா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. தெலுங்கில் தயாராகும் இந்த வெப் சீரிஸை சூர்யா வங்கலா இயக்கி வருகிறார். சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது.