சீனாவில் நடந்த 2021 ஆம் ஆண்டுக்கான ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’வில் திரையிடப்பட்ட ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தற்போது , 51 வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுக்கு சிறந்த படமாக தேர்வாகியிருக்கிறது.
கேரள அரசின் 2020 ஆண்டுக்கான மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 51-வது ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டு விருதுகள் குழுவின் தலைவராக சுஹாசினி மணிரத்னம் பணிபுரிந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலைத் தாண்டியும் இந்த ஆண்டு பல்வேறு விருதுகள் பிரிவுக்கு சுமார் 80 படங்கள் போட்டியிட்டன.
சிறந்த திரைப்படமாக பாராட்டுக்களைக் குவித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் தேர்வாகியிருக்கிறது. சமீபத்தில் கருத்தியல் ரீதியில் தென்னிந்திய ரசிகர்களிடம் அதிகம் விவாதிக்கப்பட்ட மலையாள படம், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இயக்குநர் ஜியோ பேபி இயக்கினார்.
ஏற்கனவே, சீனாவில் நடந்த 2021 ஆம் ஆண்டுக்கான ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’வில் திரையிடப்பட்ட ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தற்போது , 51 வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுக்கு சிறந்த படமாக தேர்வாகியிருக்கிறது.
அதேபோல், பிரித்விராஜ் – சச்சி நடித்த ‘அய்யப்பனும் கோஷியும்’ சிறந்த வெகுஜனப் படமாகவும் ‘கப்பெலா’ படத்தில் நடித்ததற்காக அன்னா பென் சிறந்த நடிகைக்கான விருதுக்கும் தேர்வாகியிருக்கிறார். அதேபோல, ‘வெல்லம்’ படத்தில் நடித்ததற்காக நடிகர் ஜெயசூர்யா சிறந்த நடிகராக தேர்வாகியிருக்கிறார். சிறந்த அறிமுக இயக்குநராக ‘கப்பெலா’ இயக்குநர் முஸ்தஃபா தேர்வாகியிருக்கிறார்.