ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் டீசரை சூர்யாவின் ‘ஜெய் பீம்’ டீசர் பின்னுக்குத் தள்ளி உள்ளது.
நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள படம் ஜெய் பீம். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார்.
கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கிய இந்த படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.

இதனிடையே ஜெய் பீம் படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகை அன்று வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த டீசர், யூடியூப் டிரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த டீசர் இதுவரை 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
மேலும், ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் டீசரை சூர்யாவின் ‘ஜெய் பீம்’ டீசர் பின்னுக்குத் தள்ளி உள்ளது. அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ள நிலையில், கடந்த வியாழக்கிழமை ஆயுதபூஜை ஸ்பெஷலாக படத்தின் டீசரை வெளியிட்டனர். இதுவரை 72 லட்சம் பார்வைகளை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது.