• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Byவிஷா

May 27, 2025

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாகத்திறனை மேம்படுத்தும் விதமாக முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு ஐ-ஐ சார்ந்த இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது தனியார் பள்ளிகள் இயக்குநராகப் பணியாற்றி வந்த பழனிசாமி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக, தமிழ்நாடு பாடநூல் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த குப்புசாமி, தனியார் பள்ளிகளின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுளார்.
மேலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக இருந்த உஷா ராணி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் பணியிட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.