• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக தகவல் அறியும் உரிமைச்சட்ட பயிற்சி வகுப்பு

தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த பயிற்சி வகுப்பு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெறுகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி தாம் நடத்தும் பயிற்சி வகுப்பில் பொதுமக்களும், இளைஞர்களும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
எனவே பொதுமக்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த நேர்மையான மற்றும் ஒளிவு மறைவற்ற அரசு நிர்வாகம் அமைய வேண்டும் என்கிற நல்ல எண்ணத்திலும் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1-00 மணி வரை கோபிச்செட்டிபாளையம் ,குள்ளம்பாளையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீவேலா மஹாலில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும்,கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்குகிறார்,நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்னராஜ் சிறப்புரை நிகழ்த்துகிறார். எம்.இராதாகிருஷ்ணன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த பயிற்சி வகுப்பு நடத்துகிறார்.இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட- ஆடிட்டர் அணி ஏற்பாடு செய்துள்ளது.
பொதுமக்களும், சட்ட ஆர்வலர்களும், தன்னார்வலர்களும், இளைஞர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுக்கு உண்டான தகவல் அறியும் ஊரிமை சட்ட விழிப்புணர்வு பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.