மத்திய அமைச்சர் அமித்ஷா-வை கண்டித்து மதுரையில் தமிழ் புலிகள் கட்சியினர் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சர் அமித்ஷா புகைப்படத்தை காலனியால் அடித்தும், கிழித்தும் போராட்டம் நடைபெற்றது.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அமித்ஷா பேச்சை கண்டித்தும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் தமிழக முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரை ரயில் நிலையத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் ரயில் தண்டவாளத்தில் முன்பு நின்று இருந்த ரயில் என்ஜின் முன்பு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷாவின் புகைப்படத்தை காலனியால் அடித்தும், புகைப்படத்தை கிழித்தும் மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோசகங்களை எழுப்பியவாறு இருந்தன அவர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து ரயில் நிலைய வளாகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டம் நடத்தியது ரயில் நிலையம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. முன்னதாக போலீசார் ரயில் நிலையம் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.