• Wed. Feb 12th, 2025

தவறவிட்ட ஏடிஎம்கார்டை பயன்படுத்திய இருவர் கைது

ByKalamegam Viswanathan

Dec 21, 2024

தவறவிட்ட ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நகை வாங்கி அடகு வைத்தவர் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை எல்லிஸ் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி கிருஷ்ணசாமி (வயது 72) என்பவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன்(வயது 30) என்பவரது காய்கறி கடைக்கு கடந்த வாரம் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது அவரது கைப்பை தவறவிட்டுள்ளார் என்பதை அறிந்தவர் பல இடங்களில் சென்று தேடியுள்ளார். பின்னர் இது குறித்து மதுரை எஸ். எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், இதனை அடுத்து எல்லீஸ் நகர் பகுதியில் கிருஷ்ணசாமி காய்கறி கடையில் கைப்பை தவறவிட்டதும், அவர் சென்றதும் கைப்பையை எடுத்த காய்கறி கடைக்காரர் லட்சுமணன் பையில் இருந்த ஏ டி எம் கார்டை பார்த்ததும் அதில் ரகசிய எண் எழுதி இருந்ததை கண்டதும், லட்சுமணன் அந்த கார்டில் இருந்து பணத்தை எடுத்து பைபாஸ் ரோடு நேரு நகர் பகுதியை சேர்ந்த நாகேஸ்வரி(வயது 38) என்பவரின் உதவியுடன் நேதாஜி ரோட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகையை வாங்கி பின்னர் அந்த நகையை அடகு வைத்து பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காய்கறி கடைக்காரர் லட்சுமணன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த நாகேஸ்வரி ஆகிய இருவரிடமும் எஸ். எஸ். காலனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.