• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

Byவிஷா

Aug 26, 2022

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து கொண்டு வருகின்றன.
தமிழகத்தில், 2021 நவ.,3ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின. இதுவே, பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. சென்னையில் மே 21 வரையில் நீண்ட நாட்களாக பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 100.94 ரூபாய் விலையில் எந்த வித மாற்றமும் இன்றி அதே விலையில் நீடித்து வந்தது
இந்த நிலையில், மே -21-ம் தேதி, மத்திய நிதியமைச்சர் திடீர் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.
அதை தொடர்ந்து சென்னையில் (மே 22ம் தேதி) பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இன்று (ஆகஸ்ட் 26ம் தேதி) பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகின்றது
இந்தியாவின் அண்டை மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்திற்கு சென்றாலும் இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.