அட்சய திருதியை தினத்தன்று நகை மட்டுமல்லாமல் எந்தப் பொருளையும் வாங்கலாம். ஆனால் தங்க நகைதான் அதிகமாக வாங்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் ரூ40,000க்கு மேல் சென்றுகொண்டிருந்த தங்க விலை சற்றே குறையத்தொடங்கியுள்ளது.பொதுவாகவே அட்சய திருதியை முன்னிட்டி தங்கம் வாங்குவது குடும்ப வளர்ச்சிக்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது நம்பிக்கை.கொரோனா காலம் என்பதால் கடந்த 2 ஆண்டுகள் தங்கம் விற்பனை சற்றே மந்தநிலையில் இருந்து வந்தது.
கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மீண்டும் இயல்பு நிலை முழுமையாக திரும்பி விட்டதால் மக்கள் நகை வாங்குவதில் தயக்கம் காட்டாமல் ஆர்வமாகவே இருக்கின்றனர். எனவே இந்த ஆண்டு நகை விற்பனை சிறப்பாக இருக்கும் என நகை கடை உரிமையாளர்கள் நம்புகின்றனர். தமிழ்நாட்டில் சுமார் 16 டன் தங்கம் விற்பனையாகும் என்று நகை வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
அட்சய திருதியையான இன்று நகை வாங்க உகந்த நேரம் வருமாறு:- காலை 8 மணி முதல் 9 மணி வரை, பகல் 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்கம் வாங்கலாம்.