

பராக் அகர்வாலுக்குப் பதிலாக எலான் மஸ்க் புதிய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி பணி நீக்கம் செய்யப்பட்டாலும் இழப்பீடாக ரூ.325 கோடிகிடைக்கும்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். 44 பில்லியன் டாலருக்கு மஸ்க்கிடம் விற்க ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இந் நிலையில் இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இந்தியவம்சாவழியை சேர்ந்த பராக் அகர்வால் ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது’’ எனக் கூறியிருந்தார்.
இது போன்ற காரணங்களால் பராக் அகர்வால் பணி நீக்கம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தநிலையில் பராக் அகர்வாலுக்குப் பதிலாக எலோன் மஸ்க் புதிய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் பாரக் அகர்வாலை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தால் அவருக்கு இழப்பீடாக இந்திய ரூபாய் மதிப்பில் 325 கோடி ரூபாய் வரையிலும் எலான் மஸ்க் வழங்க வேண்டும். பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்வாரா அல்லது அவரை தொடரஅனுமதியளிப்பாரா எலன்மஸ்க் என்பது தெரியவில்லை