

இன்று உலக கைக்குழுக்கல் தினமாக கொண்டாடபபடுகிறது. புதிய நண்பரை சந்திக்கும் போது ,அல்லது நீண்டகாலத்திற்கு பின் நண்பரை சந்திக்கும் போது என பல இடங்களில் மனித உறவை மேம்படுத்தும் நிகழ்வாக கைக்குழுக்கல் உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் கடைசிவியாழக்கிழமை உலக கைக்குழுக்கல்தினமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பட்ட தேதியில் கொண்டாடப்படாமல் ஜூன் கடைசி வியாழக்கிழமை கொண்டாடவது இதன் சிறப்பாகும்.கைக்குழுக்கல் என்பது நன்றி தெரிவித்தல் ,வரவேற்றல் ,சம்மதித்தல் என பல பாசிட்டிவ் உணர்வுகளை வெளிப்படுத்த கூடியதாக இருக்கிறது. முன்பின் தெரியாதவர்களிடம் கைக்குழுக்கும் போது புதிய நட்பு பிறக்கிறது. இன்று உலக முழுவதும் பிரிவினையும்,வெறுப்புணர்வும் மனிதர்களை ஆட்கொண்டிருக்கும் வேலையில் ஒருசிறிய கைக்குழுக்கல் மூலம் அன்பை வெளிப்படுத்தி ஒன்றாய் இணைவோம்.
இந்நாளில் மாதக்கணக்கில் நீடித்துவரும் ரஸ்யா -உக்ரைன் போர் முடிவுக்கு வர இருநாட்டு அதிபர்களும் கைக்குழுக்கி கொள்ள வேண்டும் என்பது உலக மக்களின் வேண்டுகோள்.

