• Tue. May 30th, 2023

காதல் மன்னன் ஜெமினி கணேசன் பிறந்த தினம் இன்று..!

Byகாயத்ரி

Nov 17, 2021

தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவர் ‘ஜெமினி கணேசன்’. காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

புதுக்கோட்டையில், 1920, நவம்பர் 17ல் பிறந்தவர் கணபதி சுப்ரமணியன் சர்மா. பின், அவரது பெயரை, ‘ராமசாமி கணேசன்’ என மாற்றினர். கல்லுாரியில் விரிவுரையாளராக பணியாற்றியவர், அதில் இருந்து விலகி, ‘ஜெமினி ஸ்டூடியோ’வில் மேலாளராக சேர்ந்தார்.

அதனால், ‘ஜெமினி கணேசன்’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. 1947ல், மிஸ் மாலினி என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து, வஞ்சிக்கோட்டை வாலிபன், கல்யாண பரிசு, களத்துார் கண்ணம்மா, அவ்வை சண்முகி உட்பட, 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

‘காதல் மன்னன்’ என அழைக்கப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இதய மலர் என்ற படத்தை இயக்கியுள்ளார். நான் அவனில்லை என்ற படத்தை தயாரித்துள்ளார்.’பத்மஸ்ரீ, பிலிம்பேர்’ உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2005 மார்ச் 22ல், தன் 85வது வயதில் காலமானார்.நடிகர் ஜெமினி கணேசன் பிறந்த தினம் இன்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *