போரியம், ஆசியம், மெய்ட்னீரியம், டார்ம்சிட்டாட்டியம், இரோயன்ட்கெனியம், கோப்பர்நீசியம் போன்ற தனிமங்களைக் கண்டறிந்த ஜெர்மன் இயற்பியலாளர் காட்பிரீடு மூன்சென்பெர்கு பிறந்தநாள் இன்று (மார்ச் 17, 1940).
காட்பிரீடு மூன்சென்பெர்கு (Gottfried Münzenberg) 1940 மார்ச் 17,1940ல் ஜெர்மனியின் சட்சோனி மாகாணத்தில் உள்ள நார்தாவுசென் நகரில் சீர்திருத்தத் திருச்சபை அமைச்சர்கள் குடும்பத்தில், பாட்டர் எயின்சு, எலன் மூன்சென்பெர்கு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தன் வாழ்க்கை முழுவதும் இவர் இறையியல், மெய்யியல் கோட்பாடுகளில் இயற்பியலின் தாக்கம் குறித்து ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் செருமனியின் கெய்சன் நகரிலுள்ள சட்டசு-இலீபிகுப் பல்கலைக்கழகம், இன்சுபிரக்கு பிரான்சென்சுப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தன்னுடைய இயற்பியல் பட்டத்தையும் தொடர்ந்து 1971இல் ஜெர்மனியின் கெய்சன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் நிறைவு செய்தார்.


1976ம் ஆண்டில் இவர், இடாமிட்டாட்டுத் தொழினுட்பப் பல்கலைக்கழகத்தில் பீட்டர் அம்புருசிடர் தலைமையில் இயங்கிய செருமனியின் சி.எசு.ஐ அணு வேதியியல் துறைக்கு இடம்பெயர்ந்தார். கனமான அயனிப் பொருள்களைப் பிரித்தெடுக்கும் பணியில் கப்பல் கட்டுமானத் தொழிலில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். பீட்டர் அம்புருசிடருடன் இணைந்து இவர் போரியம்(Bh Z=107), ஆசியம்(Hs Z=108), மெய்ட்னீரியம் (Mt Z=109), டார்ம்சிட்டாட்டியம் (Ds Z=110), இரோயன்ட்கெனியம்(Rg Z=111), கோப்பர்நீசியம்(Cn Z=112) போன்ற தனிமங்களைக் கண்டறிவதிலும் குளிர் கனவயனிப் பிணைப்புச் செயற்பாடுகளிலும் பெரும்பங்கு வகித்துள்ளார். 1984ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சி.எசு.ஐ. அமைப்பின் புதிய துண்டு பிரிப்புத் திட்டத்திற்கு இவர் தலைவரானார். இத்திட்டம் கன அயனிகளின் பொருண்மம் சார் இடைவினைகள், விந்தையான அணுக்கரு கற்றைகளை தோற்றுவித்தலும் பிரித்தலும், விந்தையான அணுக்கருக்களின் வடிவமைப்பு போன்ற பல ஆய்வுத் தலைப்புகளுக்கு அடிப்படையான வழிகளைத் திறந்து வைத்தது. மேலும் இவர் சி.எசு.ஐ அணு அமைப்பு, அணுக்கரு வேதியியலில் துறைகளின் இயக்குனராகவும் மார்ச்சு 2005இல் பணியோய்வு பெறும் வரை மைன்சுப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.
1983இல் ஜெர்மனியின் கெய்சன் பல்கலைக்கழகம் இவருக்கு அளித்த உரோஞ்சன் விருதும் 1996ஆம் ஆண்டில் பிராங்கபேட்டு நகரில் சிகாடு ஆபுமான் என்பவருடன் இணைத்து இவருக்கு வழங்கப்பட்ட ஓட்டோ-ஆன் பரிசும் இவர் பெற்ற மிகவும் குறிப்பிடத்தக்க விருதுகளாகும்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.