மதுரையைச் சேர்ந்த புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேரராசிரியாக பணிபுரிந்தவர். இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை மிகுந்த பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்துபவர். இதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்றே சொல்லலாம். பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். இவர் சங்கர் இயக்கிய முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார். சாலமன் பாப்பையா சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.அவை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: ஓர் பார்வை, உறை மலர்கள், திருக்குறள் உறையுடன் போன்றவை.மக்களிடம் தன் நகைச்சுவையால் பல கருத்துகளை கொண்டு சேர்த்த சாலமன் பாப்பையா பிறந்த தினம் இன்று..!