வி. கனகசபைப் பிள்ளை ஒரு தமிழறிஞர். ஆங்கில மொழியிலும் சிறப்பான அறிவு பெற்றிருந்த அவர் தமிழ், தமிழ் இலக்கியம், தமிழர் வரலாறு ஆகியவற்றை ஆராய்ந்து அவை தொடர்பில் ஆங்கிலத்தில் பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். இவரது தந்தையார் இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில், மல்லாகம் என்னும் ஊரைச் சேர்ந்த விசுவநாதபிள்ளை என்ற தமிழ் தொண்டர். மிகவும் இளம் வயதிலேயே சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார் கனகசபை . இதனால் இவர் boy graduate என செல்லமாக அழைக்கப்பட்டார். இவர் கனகசபைப் பிள்ளை அறிமுகப்படுத்திய கஜபாகு காலம்காட்டி முறைமை வரலாற்றாய்வாளரால் சங்ககால தமிழக வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை வரிசைப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுமுறை ஆகும். இவர் ஆங்கிலத்தில் எழுதிய ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் (The Tamils 1800 Years Ago) என்னும் நூல் புகழ் பெற்றது.இவர் எந்த ஊருக்குச் சென்றாலும், அப்பகுதிகளில் காணப்படும், பழந்தமிழ் ஓலைச் சுவடிகளைச் சேகரித்து வைத்திருந்ததுடன், அவற்றைப் படித்து ஆய்வுகளும் செய்து வந்தார். தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை கொண்ட கனகசபைப் பிள்ளை முதலில் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றை காப்பியங்களை ஆராயந்தார்.தன் எழுத்தால் கவர்ந்த வி. கனகசபைப் பிள்ளை காலமான தினம் இன்று..!