• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் உண்டியல் வருமானம் ரூ45லட்சம், தங்கம் ,வெள்ளி பொருட்களும் கிடைத்தன

Byதரணி

Apr 12, 2023

அருள்மிகு சுப் பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம். இன்றைய தினம்(12.04.2023) மதுரை இணை ஆணையர் உத்தரவுப்படி உண்டியல் திறப்பு நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பரமணிய சுவாமி கோயில், முருக பெருமானின், ஆறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருக பெருமானை தரிசித்து செல்வார்கள். பக்தர்கள் நேர்த்திக் கடனாக காணிக்கை மற்றும் வெள்ளி, தங்கம் முதலானற்றை வழங்குவர்.மதுரை இணை ஆணையர் உத்தரவுப்படி உண்டியல் திறப்பு நடைபெற்றது.
உண்டியல் வருமானம் ரூ45,99,636/-(நாற்பத்து ஐந்து லட்சத்து தொண்ணூற்று ஒன்பதாயிரத்து அறுநூற்று முப்பத்தாறு மட்டும்).தங்கம்— 0.247கி( இருநூற்றி நாற்பத்து ஏழு கிராம் மட்டும்).வெள்ளி—1.735கி( ஒருகிலோ எழுநூற்று முப்பத்தைந்து கிராம் மட்டும்).தகரம்—7.200கி (ஏழு கிலோ இருநூறு கிராம் மட்டும்)செம்பு மற்றும் பித்தளை–21.900(இருபத்தி யொரு கிலோ தொள்ளாயிரம் கிராம் மட்டும்)திருக்கோயிலுக்கு வருமானமாக கிடைக்கப்பெற்றது என்ற விபரம் தகவலுக்காக பணிந்து தெரிவிக்கப்படுகிறது