• Sat. Apr 20th, 2024

திருமங்கலம் தனியார் நிறுவனத்தில் முறைகேடாக தங்கநகைகள் ஏலம்..!

ByKalamegam Viswanathan

Mar 15, 2023

திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை முறைகேடாக ஏலம் விடப்பட்டதால் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், அடகு வைத்த 50 பவுன் தங்க நகைகளை முறைகேடாக ஏலம் – பாதிக்கப்பட்டோருக்கு இரு மடங்கு நகைகளை கொடுக்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவரின் மன உளைச்சலுக்காக ரூபாய் 50,000/-ம், அடமான நகைகளுக்கு 9சதவீதம் வட்டி மட்டுமே வாங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஐஐஎஃப்எல் நிதி நிறுவனத்தில், மதுரை திருநகரை சேர்ந்த தொழிலதிபர் சியாமளா கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி 50 பவுன் நகைகளை அடமானம் வைத்து பணத்தைப் பெற்றுக் கொண்ட நிலையில், அவர் நகைகளை திருப்ப சென்ற போது உங்களுடைய நகை எங்களுடைய கணினி இயந்திரத்தில் காண்பிக்கப்படவில்லை என மெத்தனமாக பேசியதுடன், நகைகள் ஏலம் போய் விட்டதாகவும் தெரிவித்ததால், அதிர்ச்சி அடைந்த சியாமளா, இதுகுறித்து மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று கிடைத்துள்ள நிலையில், நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பானது:
ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களை பின்பற்றாமல் சட்ட விரோதமாக ஐஐஎஃப்எல் நிதி நிறுவனம் செயல்பட்டதாகவும், ஏலம் போவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப தவறியதும், மேலும் ஏலம் போவதற்கான விளம்பரத்தை நாள்தோறும் மக்கள் பார்வைக்கு வரும் நாளிதழ்களில் வெளியிட வேண்டும், அதற்கு மாறாக மக்கள் பார்வையிடாத பத்திரிக்கையில் விளம்பரம் அளித்ததை கண்டித்தும் ,பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு அடகு வைத்த நகையை விட இரு மடங்கு நகை அதாவது 100 பவுன் தங்க நகைகளை வழங்க வேண்டும் , மேலும் வாடிக்கையாளருடைய மன உளைச்சலுக்கு ரூபாய் 50,000/-ம், அடமான நகைகளுக்கு 9 சதவீத வட்டி மட்டுமே வாங்க வேண்டும் எனவும் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *