• Tue. Mar 28th, 2023

மஞ்சூரில் ஜியோ டவர் சேவை பாதிப்பால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள்..!

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் ஜியோ நெட்வொர்க் சேவை முற்றிலும் தடைபட்டதால், வங்கி மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் மதியம் வரை தனியார் ஜியோ நெட்வொர்க் முற்றிலும் சேவை தடைப்பட்டது. சேவை தடைபட்டதால் வங்கிகள் மற்றும் வீடுகளில் இருந்து அலுவலகத்திற்கு பணியாற்றும் ஊழியர்கள் வணிக நிறுவனங்கள் என பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 4 முதல் 5 மணி நேரம் சேவை தடைபட்டதால் ஜியோ அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நெட்வொர்க் நிறுவனம் தெரிவித்ததாவது..,
எமரால்டு பகுதியில் டவரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சேவை தடைபட்டுள்ளதாகவும் பைய்பர் கனெக்ஷன் பொருத்தும் பணியும் நடைபெற்று வருவதால் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர். சிறிது நேரம் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பும் தடை ஏற்பட்டது. இதனால் பணிபுரியும் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *