• Fri. Mar 29th, 2024

திருத்தணி முருகன் கோயிலில் கல்யாண உற்சவருக்கு விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்..!

Byவிஷா

Nov 10, 2021

ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 5-ஆம் தேதி முதல் ஒருவார காலமாக கந்தசஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வந்த நிலையில், தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டும், உற்சவர் சண்முகருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதையடுத்து நேற்று மாலை புஷ்பாஞ்சலி நடைபெற்றது.


விழாவில் இறுதி நாளான இன்று காலை வள்ளி தெய்வானை சமேத கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க சீர்வரிசை வழங்கினர். கோயில் அர்ச்சகர்களால் சிறப்பு மந்திரங்கள் ஒதப்பட்டு வள்ளி தெய்வானை கழுத்தில் முருக பெருமான் தாலி கட்டினார். அப்போது திரளாக கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.


திருக்கல்யாணத்தை தொடர்ந்து நீண்ட வரிசையில் வந்த பெண்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மஞ்சள் குங்குமம், தாலி வழங்கப்பட்டது. கந்தசஷ்டி விழாவில் இறுதி நாளன இன்று முருகப் பெருமானை தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் மலைக்கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *