• Tue. Dec 10th, 2024

பஸ்-டேங்கர் லாரி மோதல்-12 பேர் பலி

Byகாயத்ரி

Nov 10, 2021

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தின் பலோத்ரா நகர் பகுதியில் 25 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. பார்மர் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டேங்கர் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் பேருந்து தீப் பிடித்து எரியத் துவங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 12 பேர் உடல் கருதி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் பேருந்து விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டேங்கர் லாரி அதிவேகமாக வந்ததே விபத்து ஏற்பட காரணம் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.


டேங்கர் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.