புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையில் கூட்டுறவு உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூபாய் 100க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. மு. அருணா, இ. ஆ. ப, அவர்கள், இன்று 05/11/26 தொடங்கி வைத்தார்.

அருகில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. சுப்ரமணியன் அவர்கள், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருமதி. தீபா சங்கரி அவர்கள், துணை பதிவாளர்கள் திரு.ராஜவேல் அவர்கள், திருமதி. மணிமேகலை அவர்கள், செயலாட்சியர் திரு. லோகநாதன் அவர்கள், மற்றும் கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.