
சிவகங்கை காளவாசல் பகுதியில் போதை பொருளான கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமாருக்கு தொடர்ந்து புகார் வந்தது.

இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் காளவாசல் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், மூவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் அவர்கள் மூவரும் அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் (19), விக்னேஸ்வரன் (17), சக்கரவர்த்தி என்பது தெரியவந்தது.

உடனடியாக அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 15 கஞ்சா பொட்டலங்கள், மற்றும் 1350 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேல் விசாரணைக்காக சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.