மக்கள் நீதி மய்யத்தின் 5-ஆம் ஆண்டு தொடக்க விழாவானது சென்னை, ஆழ்வார்பேட்டையில் இன்று (பிப்.21) நடைபெற்றது. இந்த விழாவில் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து கட்சியினருடன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் அரசியலை வியாபாரமாக நினைப்பவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வெளியேறி விட்டனர்.தமிழகத்தை சீரமைக்க தொடங்கிய கட்சி தான் மக்கள் நீதி மய்யம் ஆகும். கிராம சபை ஆகிய நகரத்திலும் வார்டு சபை அமைய வேண்டும் என்று 2010ம் ஆண்டு அரசாணை இருக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் சொசைட்டி அமைத்து தங்களது வேலைகளை பூர்த்தி செய்து கணக்கு பார்ப்பது போன்று, நகரங்களின் தெருக்களிலும் அது அமைய வேண்டும் என்று கமல்ஹாசன் பேசியுள்ளார்.