தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து கடந்த 19ம் தேதி பொள்ளாச்சி நகராட்சி, மற்றும் கோட்டூர், ஆனைமலை, உடுமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி,சமத்தூர்,வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழு பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான பாலக்காடு ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் கூடுதல் துணை கண்காணிப்பாளர் சுகாஷினி மேற்பார்வையில் துணைக் கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி தலைமையில்., சுழற்சிமுறையில் ஒரு ஆய்வாளர் 12 காவலர்கள் என கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத்துறை வாகனம் தயார் நிலையிலும் வைக்கப்பட்டுள்ளது.
டிஎஸ்பி செல்வி தமிழ்மணி கூறுகையில், ’21 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும். தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நாளை தேர்தல் என்னும் வளாகத்தில், பாதுகாப்பு பணிகள் அதிவிரைவு படை, ஆயுதப்படை சேர்ந்த 100 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட போலீசார் வாகன ரோந்து பணியில் ஈடுபடுவார்’ என தெரிவித்தார்.