• Thu. Apr 25th, 2024

லாலு பிரசாத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை

கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக பதியப்பட்ட வழக்கில் பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிராசத் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பீகார் மாநிலத்தின் முதலமைச்சாரக லாலு பிரசாத் இருந்த காலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு மேலெழுந்தது. இதனையடுத்து மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ 64 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

இதனையடுத்து லாலு பிரசாத் மீதும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் முதல் நான்கு வழங்குகளிலும் லாலு பிரசாத் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தீர்ப்பின் அடிப்படையில் மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த லாலு உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக லாலுவுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது, 5வது வழக்கிலும் அவர் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஞ்சி தோராந்தா கருவூலத்திலிருந்து ரூ.139 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டைனை விதித்தும், ரூ.60 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.

பாகல்பூர் கருவூலத்திலிருந்து சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக மேலும் ஒரு வழக்கு பாட்னா சிபிஐ நீதிமன்றமத்தில் நிலுவையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *