பல்வேறு திட்டங்களை துவக்கிவைக்க பிரதமர் மோடி தமிழக வந்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிடமாடல் குறித்த பேச்சால் பரபரப்பு.
இன்று மாலை தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுபேற்ற பிறகு நடக்கும் விழாவில் மோடி முதல்முறையாகபங்கேற்பதால் இந்நிகழ்ச்சி முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி ஏற்ற பிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் விழா இது. தமிழ்நாட்டில் திட்டங்கள் துவங்க வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் சார்பில் நன்றி. ஒட்டுமொத்த இந்திய நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் நிதிப்பங்கீடு காலப்போக்கில் குறைந்துள்ளது
. ஒன்றிய அரசின் திட்டங்களில் மாநில அரசின் பங்கு அதிகம் ஒன்றிய அரசின் நிதி குறைப்பால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை ரூ.14,000 கோடியை விரைந்து வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் பங்களிப்புக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சமூக நீதி, சமத்துவம், பெண்கள் நீதியை உள்ளடக்கியது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியையே திராவிட மாடல் என்று கூறுகிறோம்” எனப் பேசினார்.
இதுதான் திராவிட மாடல் -மோடியின் முன்பு ஸ்டாலின் பேச்சு
