• Fri. Mar 29th, 2024

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பயன்படுத்தப்படும் கார் இதுதான்!

நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு நேற்று பதவியேற்றார். இவரது பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வ வாகனமாக மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 புல்மேன் குவார்ட் (Mercedes Maybach S600 Pullman Guard) சொகுசு கார் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த காரில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்.

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் குடியரசு தலைவர் இந்த காரில் தான் பயணம் செய்யவுள்ளார். இதனால், குடியரசு தலைவருக்கான வாகனம் மிக பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் இந்த மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 புல்மேன் குவார்ட், விஆர்9 லெவல் பாலிஸ்டிக் புரடெக்சன், கை துப்பாக்கி, மிலிட்டரி ரைஃபில்லின் தாக்குதல், வெடிகுண்டு மற்றும் வாயு தாக்குதல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும் திறனை கொண்டுள்ளது. அதோடு, புல்லட் புரூஃப் மற்றும் வெடி விபத்தைத் தாங்குவதைத் தாண்டி இக்காரில் ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த காருக்குள் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் காரின், வெளிப்புறத்தில் விஷவாயு தாக்குதல் ஏதேனும் நடந்தால், உள்ளிருக்கும் குடியரசு தலைவருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் ஆக்ஸிஜனை வழங்கும். அதுமட்டுமல்லமல், இக்காரின் அலாய் வீல்கள் மற்றும் டயர்களும் புல்லட் ப்ரூஃப் திறன் கொண்டவையாக அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த காரின் ஒட்டுமொத்த நீளம் 5453 மிமீ, அகலம் 1899 மிமீ, உயரம் 1498 மிமீ, வீல் பேஸ் 3365 மிமீ என வழக்கமான சொகுசு கார்களை விட இந்த கார் அளவில் பெரியதாகவும், நீளமாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.

5980 cc என்ஜின் கொண்ட இந்த காரில் 6.0 லிட்டர் வி12 பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. 530 எச்பி பவரையும், 830 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸில் இந்த கார் இயங்குகின்றது. மேலும், இக்காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 160 கிமீ ஆகும். 8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை அது எட்டுமாம்…

காரின் இண்டீரியரை பொருத்தவரை, நவீன அம்சங்கள் கொண்ட இருக்கை, மினி குளிர்சாதன பெட்டி, பயணத்தின்போது அலுப்பு ஏற்படுத்தாத ஏர் சஸ்பென்ஷன்கள் என ஏகப்பட்ட அம்சங்கள்
ஆனால் இதன் விலையை கேட்டால் தான் தலைசுற்றி விடும்…இதன் தோராயமான விலை 10.50 கோடி ரூபாயாம்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *