• Sat. Sep 23rd, 2023

ஆர்.பி.உதயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் !

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற வழக்கறிஞர் கடந்த 12ஆம் தேதியன்று தமிழக ஊழல் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில் கடந்த 2016-2021 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பதவியில் இருந்த ஆர்.பி.உதயகுமார் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதிகளவிற்கு சொத்து குவித்துள்ளதாகவும், மேலும் தனக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் மூலமாக பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும் , அம்மா ட்ரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம் மூலமாக பொதுமக்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி முறைகேடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தினேஷின் புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் புகார்தாரரான வழக்கறிஞர் தினேஷ் இன்று மதுரை அழகர்கோவில் சாலை பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் குறித்த விசாரணைக்காக வந்தார்.

இதனையடுத்து புகார்தாரர் வழக்கறிஞர் தினேஷிடம் லஞ்ச ஒழிப்புத்துறை துணைகண்காணிப்பாளர் புகார்தன்மை குறித்தும், புகாரில் குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் தினேஷ் பேசியபோது :

ஆர்.பி.உதயகுமார் பதவியில் இருந்தபோது அம்மா ட்ரஸ்ட் என்ற பெயரில் பொதுமக்களுக்கு சைக்கிள் உள்ளிட்ட பரிசுபொருட்களை வழங்கி முறைகேடு செய்துள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் அதிகளவிற்கான வருமானத்தை காட்டியுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.

புகார் மனு

Related Post

விஸ்வகர்ம சமூக மாணவர்களின் கல்லூரி கல்வி கனவை தடுக்கும் மோடி.., இரா.முத்தரசன் கடுமையான குற்றச்சாட்டு…
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!
காவிரி நதிநீர் தீர்ப்பை செயல்படுத்தமல் கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – ஓபிஎஸ் பேட்டி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed