திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவிழா முகூர்த்த நாட்களை தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் 5 மூலவர்களையும் தரிசனம் செய்ய துணை கமிஷனர் சுரேஷ் நடவடிக்கை எடுத்திருப்பது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் கோயில் மூலஸ்தானத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சுப்பிரமணிய சுவாமி, துர்க்கை அம்மன், கற்பக விநாயகரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சத்தியகிரீசுவரர், மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ள பவளக்கனிவாய் பெருமாளை அனைத்து பக்தர்களும் முடியாத நிலை இருந்தது. சிறப்பு கட்டணத்தில் செல்லும் பக்தர்கள் மட்டுமே 5 மூலவர்களையும் தரிசிக்க முடியும் என்ற நிலையில், சமீபத்தில் கோயில் துணை கமிஷனராக பொறுப்பேற்ற சுரேஷ், கோயிலுக்குள் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், முகூர்த்த நாட்கள், திருவிழா நாட்கள், கூட்டம் அதிகமுள்ள நாட்கள் தவிர மற்ற நாட்களில் அனைத்து பக்தர்களும் 5 மூலவர்களையும் தரிசிக்கும் வகையில் பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கபட்டு வருகின்றன. அதன்படி தற்போது பக்தர்கள் 5 மூலவர்களையும் தரிசித்து மகிழலாம்.

