திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்பு
உலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கொரோனா தொற்று தீவிரமாக இருந்த நிலையில் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட து .தற்போது பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்கு வருகிறார்கள்.
தற்போது இந்தியாமுழுவதும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பக்தர்கள் காத்திருக்கும் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்வதற்காக விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது ரூ.300 கட்டண சிறப்பு தரிசனத்தில் தினமும் 25 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் என 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து வருகின்றனர். . மொத்தம் 61 நாட்களுக்கு 15.25 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 1மணிநேரத்தில் 15 லட்சம் டிக்கெட்டுகளை பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர்.
கோவிலுக்கு வெளியே நீண்ட தூரம் பக்தர்கள் தரிசனத்திற்காக மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். இதனால் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..
