• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் சொர்க்கவாசல் வழியாக வந்த பவளக்கனிவாய்ப்ப பெருமாள்

ByKalamegam Viswanathan

Dec 24, 2023

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பவளக்கனிவாய் பெருமாள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சத்யகிரிஸ்வரர் பவளக்கனிவாயப் பெருமாள் சன்னதி உள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, பவளக்கனிவாய் பெருமாள் மடப்பள்ளி அருகே உள்ள தெற்கு வாசலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சொர்க்க வாசல் வழியாக பவளக்கனிவாய் பெருமாள் பக்தர்களுக்கு தரிசனம் செய்தார்.

கோவிலில் இருந்து புறப்பட்டு கீழ ரத வீதி மேல.ரத வீதி, சன்னதி தெரு வழியாக சுவாமி வீதி உலா வந்தார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பவளக்கனி வாய் பெருமாளை தரிசனம் செய்தனர்.