• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ள நிவாரணம் பற்றாது-மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

ByKalamegam Viswanathan

Dec 24, 2023

மதுரையில் இருந்து விமான மூலம் சென்னை செல்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்போது அவர் கூறுகையில்,

தென் மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்கவில்லை என குறித்த கேள்விக்கு,

தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாய மக்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள நிவாரணம் போதாது குறைவான தொகை வழங்கியுள்ளது.

தென் மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட வெள்ள நிவாரணத் தொகை குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டால் தான் தமிழக அரசு அது குறித்து தெரிவிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு,

திமுக அறிவித்ததா அல்லது தமிழ்நாடு அரசு அறிவித்ததா என்று செய்தியாளர்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

சென்னை வானிலை ஆய்வு மையம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு,

அதைப்பற்றி விரிவான அறிக்கையை நேற்றே வெளியிட்டு இருக்கிறேன்.