



டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்தை நாங்கள் வரவேற்கின்றோம் என சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் செய்தியாளரை சந்தித்தார்.

அப்போது பேசிய திருமாவளவன்..,
தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை குறித்தும் தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள் என்பது குறித்தும் மத்திய அமைச்சர்களை சந்தித்து முறையிட இருக்கின்றோம்,
இந்த மாத கடைசியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார் இந்த சூழலில் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு முறையிட இருக்கின்றோம்.

டாஸ்மார்க் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்தை முன்னெடுக்கும் போது
போலீசார் பாஜகவினரை நடத்தி நிறுத்தி வருகின்றனர் என்ற கேள்விக்கு?
சட்டம் ஒழுங்கு என்ற அடிப்படையில் காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் இந்தப் போராட்டத்தை நாங்கள் வரவேற்கின்றோம்.
மதுபானம் முற்றிலுமாக தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு, இந்த நிலைப்பாட்டிற்காக குரல் கொடுக்கக்கூடிய யாராக இருந்தாலும் அதை நாங்கள் வரவேற்கின்றோம்.

பாஜகவினர் அரசியல் காரணங்களுக்காக அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்ற ஒரு உத்தியாக இதை கையாளுகின்றார் என்றால் பாஜகவினர் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது,பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் மது ஒழிப்பு கொள்கையை நடைமுறைப் படுத்துகின்றார்களா என்ற கேள்வி எழுகின்றது. பாஜக ஆளுகின்ற மாநிலங்களும் மதுவை ஒழிப்பேன் என முன்னிறுத்தினால் அதை நாங்கள் முழு மனதோடு வரவேற்கலாம்.
நாங்கள் கூட்டணி கட்சியாக இருந்தாலும் தோழமை கட்சியாக இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகள் கூறியபடி, மது ஒழிப்பு கொள்கையில் திமுக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும் என எனது வேண்டுகோள் என இவ்வாறு கூறினார்.

