தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் ஜே இ இ மெயின் தேர்வு 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 20ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

இதில் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனம் இந்த ஆண்டு அபாரமான வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது இதில் பசலா மோகித் மற்றும் பி.வி.சந்திரசேகர் ரெட்டி ஆகிய இரண்டு மாணவர்கள் 300க்கு 300 மதிப்பெண் முழுமையாக பெற்று அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளனர் பொது பிரிவில் அகில இந்திய அளவில் 1, 1, 8, 11 மற்றும் 15 ஆகிய இடங்களை பெற்று ஸ்ரீசைதன்யா கல்வி நிறுவனம் மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது மொத்தத்தில் ஸ்ரீசைதன்யா பள்ளியை சேர்ந்த 27 மாணவர்கள் முதல் 100 இடங்களுக்குள்ளும், 166 மாணவர்கள் தேசிய அளவில் முதல் 1000 இடங்களுக்குள்ளும் தரவரிசைகளை பெற்றுள்ளனர்.
JEE தேர்வில் தமிழ்நாடு ஸ்ரீ சைதன்யா பள்ளிகள் சிறப்பான சாதனை புரிந்துள்ளது.

சென்னை நொளம்பூரில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியை சேர்ந்த அபிஜித்சதீஷ் அகில இந்திய அளவில் 60-வது இடத்தையும், பெரும்பாக்கத்தை சேர்ந்த எஸ்.டி.வத்சன் அகில இந்திய அளவில் 166 வது இடத்தையும் பெற்று ஸ்ரீ சைதன்யா பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து பிரிவுகளிலும் 25 மாணவர்கள், முதல் ஆயிரம் இடங்களுக்குள் வெற்றி பெற்றுள்ளனர்.
59 மாணவர்கள், 99 சதவீதத்திற்கும் மேலான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
250 மாணவர்கள், 95 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்வின் மூலம் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனம் வலுவான கல்வி அடித்தளமும், தொடர்ச்சியான செயல் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது .
இதனால் சுமார் ஆயிரம் மாணவர்கள் தகுதி பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, நொளம்பூர் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில்
JEE main தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாராட்டி விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ சைதன்யா பள்ளிகளின் இயக்குனர் சீமாபோபன்னா மற்றும் தமிழ்நாடு செயல்பாட்டு தலைவர் அரிபாபு ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், ஆசிரியர் பெருமக்களை பாராட்டி பொன்னாடை அணிவித்து, சாதனையாளர் விருது வழங்கினர்.
அதைத்தொடர்ந்து அகில இந்திய அளவில் வெற்றி பெற்று சாதனை புரிந்த மாணவர்களுடன் சேர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கேக்வெட்டி, தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ சைதன்யா பள்ளிகளின் ஆசிரியர் பெருமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.




