



வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில் குளிர்ந்த குடிநீர் மையம் மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைக்கப்பட்டது.
சென்னையில் படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசியல் கட்சியினர் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் மற்றும் பொதுமக்களுக்கு பழரசம் உள்ளிற்றவற்றை வழங்கி வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் அருகில்,
திமுக சார்பில் பொதுமக்களுக்கு பயன் பெரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட குளிர்ந்தது குடிநீர் மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்து பொது மக்களுக்கு தர்பூசணி வெள்ளரிக்காய் பொரிந்த பழரசம் மற்றும் குடைகளை வழங்கினார்.

